பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் கனடிய அரசியல்

Sikh_Sunny_Shia

மேற்கு நாடுகளின் அரசியல் படிப்படியாக மூன்றாம் உலக நாட்டு அரசியல் போல் மாறி வருகின்றன. அதற்கு கடனடிய அரசிலும் விலக்கல்ல. SNC Lavalin விவகாரத்தால் பெரும் அரசியல் நெருக்கடியில் உள்ள ரூடோ (Trudeau) அரசும் சீக்கிய-இந்திய விவகாரத்தில் இரட்டை வேடம் பூண்டுள்ளது.
.
2018 ஆம் ஆண்டு கனடிய அரசு நாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பயங்கரவாதம் தொடர்பாக அறிக்கை ஒன்றை “Terrorist Threat to Canada” என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டு இருந்தது. அதில் “Sikh extremisim” பயங்கரவாதம், Sunny மற்றும் Shia பயங்கரவாதங்களுக்கு நிகராக குறிப்பிடப்பட்டு இருந்தன.
.
நேற்று சனிக்கிழமை கனடிய பிரதமர் ரூடோ கனடாவின் வான்கூவர் நகருக்கு அண்மையில் உள்ள சீக்கிய கோவில் ஒன்றுக்கு வைசாகி கொண்டாட்டத்துக்கு சென்றிருந்தார். அவரின் இந்த பயணத்துக்கு சில தினங்களின் முன் “Sikh extremisim” என்ற சொற்கள் மேற்படி அறிக்கையில் இருந்து விலக்கப்பட்டு உள்ளன. இது சீக்கிய வாக்குகளை பெற ரூடோ செய்துகொண்ட கீழ்த்தர அரசியலே அன்றி வேறு ஒன்றுமில்லை.
.
இந்த திருத்தும் தொடர்பாக ரூடோ தரப்பில் நியாயம் ஒன்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலர் செய்யும் நடவடிக்கைகளுக்காக முழு இனத்தையோ அல்லது மதத்தையோ குற்றம் கூறமுடியாது என்பதாகும். அது உண்மைதான்.
.
ஆனால் இங்கு நகைப்புக்குரிய உண்மை என்னவென்றால், மேற்படி அறிக்கையில் உள்ள சுனி (Sunny), சியா (Shia) போன்ற மதங்களின் பெயர்கள் தொடர்ந்து இருப்பதே. Sikh என்ற சொல்லை விலக்கியதுபோல் ஏன் Sunny மற்றும் Shia ஆகிய சொற்களை விலக்கவில்லை என்பதற்கு ரூடோவிடம் பதில் இல்லை.
.
சிலவேளை சுனி  மற்றும் சியா மசூதிகளுக்கு பயணம் மேற்கொள்ள சில தினங்கள் முன் அவற்றையும் நீக்குவார்களோ?
.
அதேவேளை இந்தியாவுடனும் நல்ல உறவை கொண்டிருக்க விரும்புகிறது கனடா. வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தில் பங்கு கொள்ள கனடா கடுமையாக முயற்சியும் செய்கிறது.
.
கனடாவில் சுமார் 500,000 சீக்கிய மக்கள் உள்ளனர். 2015 ஆம் ஆண்டில் 16 சீக்கியர்கள் தேர்தலில் வென்று இருந்தார்கள். அதில் 4 பேர் தற்போதும் ரூடோ அமைச்சரவையில் உள்ளனர்.
.
Government of Canada Web:

Canadian Government Link

.