பிலிப்பீன் சூறாவளிக்கு 1 மில்லியன் பேர் நகர்வு

பிலிப்பீன் சூறாவளிக்கு 1 மில்லியன் பேர் நகர்வு

ஞாயிற்றுக்கிழமை பிலிப்பீனின் (Philippines) தெற்கு பகுதியை Goni என்ற சூறாவளி தாக்க ஆரம்பித்து உள்ளது. இதன் காற்றுவீச்சு 225 km/h இல் இருந்து 310 km/h வரையில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதனால் சுமார் 1 மில்லியன் மக்கள் வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர்.

சூறாவளி Goni அதிகூடிய வல்லமை கொண்ட வகை 5 (Category 5) ஆக இருக்கும். 2013 ஆம் ஆண்டுக்கு பின் அப்பகுதியை தாக்கும் பலமான சூறாவளி Goni ஆகும். 2013 ஆம் ஆண்டு சூறாவளிக்கு சுமார் 6,300 பேர் பலியாகி இருந்தனர்.

அங்கு மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டு உள்ளது. துறைமுகங்களை நடவடிக்கைளை இடைநிறுத்தி உள்ளன. விமான சேவைகளும் குறைக்கப்பட்டு உள்ளன.

பிலிப்பீன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சிறிய, பெரிய அளவிலான சூறாவளி தாக்குதலுக்கு உள்ளாகும். Goni அந்நாட்டை இந்த ஆண்டு தாக்கும் 18 ஆவது சூறாவளி ஆகும்.