பிலிப்பீனில் தொலைந்து போயுள்ள $2.1 பில்லியன்

Wirecard

German நாட்டில் தலைமையகத்தை கொண்ட Wirecard என்ற credit card மூலமான கொள்வனவுகளுக்கு உதவும் (card payment processor) நிறுவனத்தின் பிலிப்பீன் கிளையில் சுமார் $2.1 பில்லியன் காணாது போயுள்ளது. இந்த உண்மையை பிலிப்பீன் மத்திய வங்கி இன்று ஞாயிறு தெரிவித்து உள்ளது.
.
Wirecard நிறுவனத்தின் பிலிப்பீன் பிரிவு குறைந்தது 4 தடவைகள் தனது காலாண்டு அறிக்கைகளை வெளியிட தவறி இருந்தது. பங்கு சந்தை மூலம் பணம் பெற்று இயங்கும் நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒருதடவை நிறுவனத்தின் finacial அறிக்கைகளை வெளியிடல் அவசியம்.
.
Wirecard மீது சந்தேகம் கொண்ட கணக்காய்வு நிறுவனமான Ernst & Young அதன் கணக்கியல் புத்தகங்களை புலனாய்வு செய்தபோது $2.1 பில்லியன் தொலைந்து உள்ளமை தெரிய வந்துள்ளது.
.
Wirecard நிறுவனத்தின் கணக்கியல் புத்தகங்களில் BDO Unibank Inc, Bank of the Philippine Island ஆகிய இரண்டு வங்கிகளிலும் $2.1 பில்லியன் பணம் வைப்பு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் அதை விசாரணை செய்தபோது மேற்படி இரண்டு வங்கிகளும், அந்நாட்டின் மத்திய வங்கி மூலமாக, தம்மிடம் அவ்வாறு கணக்குகள் இல்லை என்று கூறியுள்ளன.
.
Wirecard வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் 2019 ஆம் ஆண்டுக்கான financial statements களை முறைப்படி பதிவு செய்யாதுவிடின் அதற்கான வங்கி உரிமைகள் பறிக்கப்படலாம்.
.
ஜெர்மனியின் DAX 30 பங்குச்சந்தை சுட்டியில் உள்ள Wirecard நிறுவனம் Germany, Indonesia, UK, சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, சீனா, அமெரிக்கா ஆகிய பல நாடுகளில் செயல்படுகிறது.
.