தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள சிறை கைதிககளின் வன்முறைக்கு இன்று குறைந்தது 52 பேர் பலியாகி உள்ளனர். சிறை ஒன்றின் ஒரு பகுதில் வைக்கப்பட்டு இருந்த வன்முறை குழு ஒன்றின் உறுப்பினர், இன்னோர் பகுதியில் இருந்த வேறு ஒரு குழுவின் கைதிகளை தாக்கி உள்ளனர்.
.
இன்று திங்கள் காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த வன்முறை மதியம் அளவில் கடுப்பாட்டுள் வந்தது. சுமார் 200 கைதிகளை மட்டும் கொள்ளக்கூடிய இந்த சிறையில் 300 கைதிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
.
உலகின் 3ஆவது பெரிய கைதிகள் தொகையை பிரேசில் கொண்டுள்ளது. இங்கு சுமார் 700,000 கைதிகள் உள்ளனர். அதாவது ஒவ்வொரு 100,000 பேரில் சுமார் 325 பேர் கைதிகள்.
.
Prison Population | Rate per 100,000 | |
America | 2,121,000 | 655/100,000 |
China | 1,646,000 | 118/100,000 |
Brazil | 700,000 | 325/100,000 |
Russia | 467,000 | 316/100,000 |
India | 420,000 | 33/100,000 |
Sri Lanka | 20,000 | 94/100,000 |
.