ஆபிரிக்க நாடுகளில் இயங்கும் Glencore Energy UK Limited என்ற எண்ணெய் அகழ்வு செய்யும் நிறுவனம் பல ஆபிரிக்க நாடுகளில் $28 மில்லியன் இலஞ்சம் வழங்கியதாக ஏற்றுக்கொண்டுள்ளது. பிரித்தானியாவின் Serious Fraud Office (SFO) செய்த விசாரணையின் பின்னரே Glencore இந்த உண்மையை ஒத்துக்கொண்டுள்ளது.
பல ஆபிரிக்க நாடுகளில் Glencore எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வேலைகளுக்கான உரிமையை பெறல், குளறுபடி செய்வதை கவனியாது விடல் போன்ற விரோத நடவடிக்கைகளுக்கே இலஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனம் பிரேசிலிலும், அமெரிக்காவிலும் ஏற்கனவே குற்றவாளியாக காணப்பட்டுள்ளது. அமெரிக்காவில் Glencore $1.1 பில்லியன் தண்டம் செலுத்துகிறது. Glencore மீது சுவிற்சலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வேறு வழக்குகள் தொடர்கின்றன.
Glencore தான் செய்த குற்றங்களுக்கு பிரித்தானியாவில் $1.5 பில்லியன் தண்டம் செலுத்தவுள்ளது. ஆனால் இந்த தண்டப்பணம் நியாயப்படி ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லாது.
அதேவேளை நைஜிரியா, கமரூன், Equatorial Guinea, Ivory Coast, சூடான் ஆகிய நாடுகளில் இயங்கும் Glencore நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஒன்று ஏற்கனவே 7 குற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
உலகம் எங்கும் சுமார் 135,000 ஊழியர்களை கொண்ட Glencore நிறுவனம் 2021ம் ஆண்டு சுமார் $203.75 பில்லியன் வருமானத்துடன், $4.3 பில்லியன் இலாபமும் ஈட்டி உள்ளது.