பிரித்தானிய 4 கிழமைகளுக்கு மீண்டும் முடக்கம்

பிரித்தானிய 4 கிழமைகளுக்கு மீண்டும் முடக்கம்

கரோனா காரணமாக டிசம்பர் 2 ஆம் திகதி வரையான 4 கிழமைகளுக்கு பிரித்தானியாவை மீண்டும் முடக்க உள்ளதாக பிரதமர் ஜோன்சன் இன்று தீர்மானித்து உள்ளார். இம்முறை நத்தார் பண்டிகையும் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உணவகங்கள், pubs, Gym, களியாட்ட நிலையங்கள் போன்ற அத்தியாவசியம் அற்ற நிலையங்கள் மீண்டும் 4 கிழமைகளுக்கு மூடப்படும்.

ஆனால் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடர்ந்தும் செயல்படும்.

முடக்கப்பட்ட ஊழியர்களுக்கான 80% உதவி தொகை நவம்பர் மாதம் வரை நீடிக்கப்படும் என்றும் பிரதமர் கூறி உள்ளார். பிரதமர் இந்த தீர்மானத்தை சில கிழமைகளுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கூறியுள்ளது. எதிர்க்கட்சி இரண்டாம் முடக்கத்துக்கு  ஆதரவு வழங்கும் என்றும் கூறியுள்ளது.

தினமும் பல்லாயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகும் நிலை தோன்றலாம் என்றும் அதை ஒரு பொறுப்புள்ள பிரதமர் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அங்கு கரோனா பரவல் மீண்டும் உக்கிரம் அடைவதையே அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் மீண்டும் முடங்க ஆரம்பித்து உள்ளன.