நாளை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தான வெளியேற்ற வாக்கெடுப்பு மீண்டும் பின்போடப்பட்டு உள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஏற்படுத்திக்கொண்ட பிரிவு திட்டம் போதிய வாக்குகளை வெற்றி கொள்ளாது என்ற காரணத்தாலேயே வாக்கெடுப்பு பின் போடப்பட்டு உள்ளது.
.
மே தனது உரையில் “நாம் திட்டமிட்டபடி நாளை வாக்கெடுப்பை நடாத்தினால் பிரிவு திட்டம் அதிக வாக்குகளால் நிராகரிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
.
மே தலைமயிலான கூட்டணியின் 100 உறுப்பினர்வரை இந்த திட்டத்தை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் எதிர்த்து வாக்களித்தால், மே பதவியை விட்டு விலக நேரிடலாம்.
.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால், தரையால் இணைந்துள்ள பிரித்தானிய மாநிலமான வடக்கு அயர்லாந்துக்கும் (Northern Ireland), ஐரோப்பிய ஒன்றிய நாடாகவுள்ள அயர்லாந்துக்கும் (Ireland) இடையிலான எல்லை கடவைகளின் நிலை என்னவாகும் என்பது மிக முக்கிய கேள்வியாக உள்ளது.
.
மே மீண்டும் ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கலுடன் பிரித்தானிய வெளியேற்றம் தொடர்பாக உரையாடவுள்ளார்.
.