ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது (Brexit) தொடர்பான சட்டத்தை தற்போதைய பிரித்தானிய பிரதமர் தன்னிச்சையாக மாற்றி அமைக்க முயல்வதை 5 முன்னாள் பிரித்தானிய பிரதமர்கள் நிராகரித்து உள்ளனர். Tory கட்சி பிரதமர்களான David Cameron, Teresa May, John Major, Labour கட்சி பிரதமர்களான Tony Blair, Gordon Brown ஆகியோரே தற்போதைய பிரதமர் Boris Johnson க்கு எதிராக கிளர்ந்து உள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற முடிவு செய்திருந்தது. ஆனால் பிரித்தானியாவின் அங்கமான வட அயர்லாந்து தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க முடிவு செய்தது. அதனால் வட அயர்லாந்துக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் எவ்வகை சுங்க செயற்பாடுகள் நடைமுறை செய்யப்படும் என்பதில் குழப்பம் உருவாகியது.
ஐரோப்பிய ஒன்றியமும், பிரித்தானியாவும் இணைக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தி அதற்கு அமையவே இருதரப்பும் வட அயர்லாந்து எல்லையில் செயல்படும் என்று பிரித்தானிய பாராளுமன்றமும், ஐரோப்பிய ஒன்றியமும் சட்டம் உருவாக்கி இருந்தன. ஆனால் Boris Johnson இணக்கம் எதுவும் இன்றி வெளியற முனைகிறார்.
பிரித்தானியா அவ்வாறு வெளியேறினால் ஐரோப்பிய ஒன்றியம் வட அயர்லாந்து-பிரித்தானியா எல்லையில் முழுமையான சுங்கத்தை நிலைநாட்டலாம். அச்செயல் பிரித்தானியாவை பிரிப்பது போன்றது. அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உரிமை வழங்கும், பிரித்தானிய பாராளுமன்றம் சட்டப்படி வழங்கிய, சட்டத்தையே தன்னிச்சையாக Johnson மாற்ற முனைகிறார்.
பல Johnson கட்சி ஆதரவாளர் Johnson னின் Internal Market Bill என்ற இந்த சட்டத்துக்கு ஆதவு வழங்க மறுத்தாலும், Johnson தரப்பில் சட்டத்தை நிறைவேற்ற போதிய வாக்குகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
வாக்கெடுப்பு பிரித்தானிய நேரப்படி இன்று திங்கள் இரவு 10:00 மணியளவில் இடம்பெறும்.