பிரித்தானிய பாராளுமன்றம் இடைநிறுத்தம்

UK_EU

பிரித்தானிய பாராளுமன்றத்தை இன்று திங்கள் முதல் இடைநிறுத்தம் செய்துள்ளார் புதிய பிரதமர் Boris johnson. பாராளுமன்றை தனது கட்டுப்பாடில் வைக்க முடியாத நிலையிலேயே பிரதமர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.
.
இன்று திங்கள் அமர்வின் பின்னரே இந்த இடைநிறுத்தம் (suspension) இடம்பெறுகிறது.
.
கடந்த கிழமை பாராளுமன்றில் தோல்வி அடைந்த பிரதமர் அக்டோபர் 31 ஆம் திகதி ஒரு பொதுத்தேர்தலை நடத்தும் உரிமையை வழங்குமாறு இன்று திங்கள் கேட்டிருந்தார். அந்த உரிமையையும் பெற முடியாத நிலையிலேயே பிரதமர் பாராளுமன்றை இடைநிறுத்தம் செய்துள்ளார்.
.
இந்த இடைநிறுத்தம் அக்டோபர் 14 ஆம் திகதிவரை நீடிக்கும். இவ்வளவு நீண்ட காலத்துக்கு பாராளுமன்றை இடைநிறுத்தம் செய்வது இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இதுவே முதல் தடவை.
.
தற்போதைய நிலைப்படி பிரித்தானியா அக்டோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும். அல்லது அதற்கு முன் வேறு ஒரு இணக்கத்துக்கு வரவேண்டும்.
.