பிரித்தானிய துவேஷிகள் வன்முறையில், காரணம் பொய்

பிரித்தானிய துவேஷிகள் வன்முறையில், காரணம் பொய்

பிரித்தானிய துவேஷிகள் சுமார் 30 நகரங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வன்முறைக்கு கூறும் காரணம் பொய்யானது என்று அறிவிக்கப்பட்டாலும் வன்முறைகள் தொடர்கின்றன. அரசு சுமார் 6,000 விசேட போலீசாரை குவித்துள்ளது.

ஒரு கிழமைக்கு முன் 17 வயது பையன் ஒருவன் Southport என்ற இடத்தில் சிறுவர்களை கத்தியால் கொடூரமாக குத்தியதால் 6, 7, 9 வயது சிறுமிகள் 3 பேர் பலியாகி இருந்தனர்.சந்தேக நபர் 17 வயதுடையவர் என்றபடியால் அவனின் பெயர் முதலில் வெளியிடப்படவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய குடிவரவாளர் மற்றும் முஸ்லீம்கள் மீது காழ்ப்பு கொண்ட துவேஷிகள் கத்தி குத்தை செய்த பையன் பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த முஸ்லீம் என்று இனையம் பொய் பிரச்சாரம் செய்தனர்.

பொய் பிரச்சாரம் பரவ, பெருமளவு துவேஷிகள் வீதிக்கு வந்து வன்முறைகளில் ஈடுபட்டனர். வன்முறைக்கான காரணம் பொய் என்பதை நிரூபிக்க அரசு 17 வயது பையனின் பெயர் Axel Rudakubana என்றும், பிரித்தானியாவில் பிறந்தவன் என்று கூறியது. இவனின் பெற்றார் ருவாண்டா நாட்டில் இருந்து வந்த கிறீஸ்தவர்கள்.

ஆனாலும் துவேஷிகளின் வன்முறை தொடர்கிறது. அங்கு அகதிகளை கொண்டிருந்த இரண்டு Holiday Inn கள் வன்முறையாளரால் தாக்கப்பட்டுள்ளன.