இரண்டு பிரித்தானிய கொடி கொண்ட எண்ணெய் கப்பல்களை (tanker) ஈரான் கைப்பற்றி உள்ளதாக பிரித்தானியா கூறியுள்ளது. Stena Impero என்ற எண்ணெய் காவும் கப்பலும் MV Mesdar என்ற எண்ணெய் காவும் கப்பலும் ஈரானால் கைப்பற்றப்பட்டு உள்ளன.
.
வெள்ளிக்கிழமை ஈரானின் 4 யுத்த கப்பல்களும், 1 ஹெலியும் முதலில் Stena Impero என்ற கப்பலை சுற்றி வளைத்துள்ளன. பின்னர் இந்த எண்ணெய் கப்பல் ஈரானின் துறைமுகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
.
இந்த விசயம் தொடர்பாக கருத்து கூறிய பிரித்தானிய வெளியுறவு செயலாளர் தாம் இராஜதந்திர முறையில் முரண்பாடுகளை தீர்க்க விரும்புவதாகவும், இராணுவ அணுகுமுறையை கையாள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
.
Stena Impero என்ற கப்பலில் 23 இந்தியா, ரஷ்யா, லத்விய, பிலிப்பீன் ஆகிய நாடுகளின் ஊழியர்கள் பணியாற்றி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
.
சில தினங்களுக்கு முன் பிரித்தானியா ஈரானின் எண்ணெய் கப்பல் ஒன்றை Gibraltar பகுதில் கைது செய்திருந்தது. அக்கப்பல் சிரியாவுக்கு எண்ணெய் எடுத்து செல்கிறது என்ற காரணத்தை பிரித்தானியா கூறி இருந்தது.
.