பிரித்தானிய இராணி 96 வயதில் மரணம்

பிரித்தானிய இராணி 96 வயதில் மரணம்

பிரித்தானியாவின் இராணி Queen Elizabeth II இன்று தனது 96 ஆவது வயதில் மரணமானார் என்ற செய்தியை Buckingham Palace அறிவித்துள்ளது. இவர் மரணிக்கும் வேளையில் ஸ்காட்லாந்தில் உள்ள Balmoral அரண்மனையில் இருந்துள்ளார்.

அரச குடும்ப அறிவிப்பின்படி இராணி “episodic mobility problem” காரணமாக அண்மை காலங்களில் முடங்கி இருந்துள்ளார். அதனால் இந்த கிழமை பதவி ஏற்ற புதிய பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் இராணியின் மனைக்கு சென்றே பதவி ஏற்பை செய்து இருந்தார்.

Elizabeth II 1952ம் ஆண்டு, தனது 25 வயதில், தந்தை King George VI மரணித்த வேளை இராணி பதவியை அடைந்திருந்தார். அதனால் இவர் 70 ஆண்டுகள் இராணியாக இருந்துள்ளார்.

இராணியின் மகன் Charles, வயது 73, தற்போது அரசர் (King) பதவியை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த பதவி ஏற்பு இடம்பெற சில மாதங்கள் தேவைப்படும்.