பிரித்தானிய அரசின் இரண்டாம் அமைச்சரும் நீங்கினார்

பிரித்தானிய அரசின் இரண்டாம் அமைச்சரும் நீங்கினார்

ஆட்சிக்கு வந்து சுமார் 6 கிழமைகளில் இரண்டாவது அமைச்சரும் பிரித்தானிய பிரதமர் டிரஸ் ஆட்சியில் இருந்து பதவி நீங்கியுள்ளார். Suella Braverman என்ற உள்துறை அமைச்சரே (home secretary) இன்று புதன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இந்த அமைச்சர் அரச ஆவணம் ஒன்றை தனது தனியார் email மூலம் அனுப்பியதே பதவி நீங்கலுக்கான காரணம் என்று கூறப்படுகிறது. அனால் இவர் பிரதமரை சாடியதுவும் காரணம் ஆகலாம்.

Grant Shapps என்பவர் தற்போது உள்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் முன்னை போக்குவரத்துக்கு அமைச்சராக பணியாற்றியவர்.

அதேவேளை டிரஸ் அரசு பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு எண்ணெய் அகழ்வு தொடர்பாக (fracking) ஒரு சட்டத்தை எடுத்த வேளையில் பிரதமர் உட்பட 40 பாராளுமன்ற ஆளும் கட்சி உறுப்பினர் வாக்களியாது இருந்துள்ளனர். முன்னாள் பிரதமர் தெரசா மே, முன்னாள் நிதி அமைச்சர் Kwasi Kwarteng ஆகியோரும் கூடவே வாக்களிக்கவில்லை. இது ஆளும் கட்சிக்குள் நிலவும் பிளவை காட்டுகிறது.

இந்த ஆட்சி நீண்டகாலம் நீடிப்பது தற்போது கேள்விக்குறியே. அத்துடன் அடுத்த தேர்தலில் Tory என்ற இந்த கட்சி வெல்வதும் கடினமாகும்.