பிரித்தானியாவில் Priti Patel இன்று பலரும் எதிர்பார்த்தபடி தனது அமைச்சர் பதவியை விட்டு விலகியுள்ளார். பிரித்தானிய பிரதமர் Theresa May உடனான சந்திப்பின் பின்னரே Patel தனது பதவியை விட்டு விலகியுள்ளார். இவரே பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சம் வழிவந்த Cabinet அமைச்சர் ஆவார்.
.
.
பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக (International Development Secretary) பதவி வகித்துவந்த இவர், பிரித்தானிய அரசுக்கு தெரிவிக்காது இஸ்ரேல் பிரதமரையும், அந்நாட்டின் பல அதிகாரிகளையும் சந்தித்து உள்ளார். இவர் மொத்தம் 12 இவ்வகை அங்கீகரிக்கப்படாத சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார். இது வழமைக்கு முரணானது.
.
.
அது மட்டுமன்றி பட்டேல் சிரியாவிடம் இருந்து இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் கைப்பற்றி வைத்திருக்கும் Golan Heights என்ற பகுதிக்கும் சென்றுள்ளார். ஐ.நா. கொள்கைபடியும், பிரித்தானியாவின் கொள்கைபடியும் Golan Heights சிரியாவின் நிலம். அங்கு நிலைகொண்டுள்ள இஸ்ரேல் இராணுவத்தையம் இவர் சந்தித்து உள்ளார். அத்துடன் இந்த occupied பகுதிக்கு உதவிகள் வழங்கவும் பட்டேல் இணங்கி உள்ளார். அதுவும் பிரித்தானிய கொள்கைக்கு முரணானது.
.
.
ஆபிரிக்க நாடான கென்யா (Kenya) சென்றிருந்த இவர் புதன்கிழமை பிரித்தானியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அப்போதே இவரின் பதவி முடிவது புலனாகியது.
.
இவர் பிரித்தானியாவில் பிறந்திருந்தாலும், இந்தியாவில் பிறந்திருந்த இவரை பெற்றார் உகண்டாவில் இருந்து, இடியமினுக்கு பயந்து, பிரித்தானியா சென்றவர்கள்.
.