பிரித்தானிய முதலீட்டு/பங்கு சந்தையில் ஊழல் இடம்பெறாது பார்த்துக்கொள்ளும் கடமையை உள்ளடக்கிய அமைச்சர் (Treasury’s Economic Secretary) Tulip Siddiq, வயது 42, பங்களாதேஷ் அணுமின் உலை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
Tulip தற்போது பங்களாதேஷில் இருந்து விரட்டப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள Hasina Sheikh என்ற முன்னாள் பிரதமரின் மூத்த அக்காவின் மகள் ஆவார். ஆனால் Tulip பிறந்தது பிரித்தானியாவில்.
ரஷ்யாவின் உதவியுடன் பங்களாதேஷில் அமைக்கப்படும் Rooppur Power Plant என்ற அணுமின் உற்பத்தி திட்டத்திலேயே மொத்தம் 3.9 பில்லியன் பவுண்ட்ஸ் ஊழல் இடம்பெற்றதாக தற்போதைய பங்களாதேஷ் அரசு கூறுகிறது.
Tulip தனக்கும் பங்களாதேஷின் அணுமின் உலை திட்டத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினாலும், இந்த திட்ட கையொப்பம் இடல் நிகழ்வுக்கு இவர் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்று ரஷ்ய சனாதிபதி பூட்டின், முன்னாள் பிரதமர் Hasina ஆகியோருடன் படம் பிடித்துள்ளார். இந்த படத்தை Associated Press செய்தி நிறுவனமே பிடித்து இருந்தது.
Rooppur pillow scandal (2019): இந்த அணுமின் உலையில் கடமை செய்வோர் தங்கியிருக்க அமைக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கிய சந்தையில் சுமார் $2.80 பெறுமதியான தலையணைகளுக்கு ஊழலில் ஈடுபட்டோர் $50 அறவிடப்பட்டதாகவும், அவற்றை காவும் கூலியாக $7.80 அறவிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிலர் கைதும் செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Tulip பங்களாதேஷ் Awami League கட்சி ஆதரவாளர் ஒருவரின் லண்டன் வீட்டில் குடியிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் Salman Rahman என்ற Awami League அமைச்சரின் மகனின் லண்டன் வீட்டில் குடியிருந்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தார்.