பிரித்தானிய Boris Johnson ஆட்சி தற்பொழுது பெரும் குழப்பத்தில் உள்ளது. பலர் Boris Johnson ஆட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இறுதியாக Alex Chalk என்ற அந்நாட்டு solicitor general தனது பதவியில் இருந்து விலகி உள்ளார்.
ஏற்கனவே Rishi Sunak என்ற நிதி அமைச்சரும், Sajid Javid என்ற சுகாதார அமைச்சரும் தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் இன்று செவ்வாய் வழங்கி உள்ளனர். இரண்டு பிரதான அமைச்சர்கள் சில நிமிடங்களில் பதவி விலகுவது பிரதமருக்கு ஏற்கனவே பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது.
இந்த இரண்டு அமைச்சர்களும் பிரதமர் மீது பழியை சுமத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்த தவறுகளை பிரதமர் சுட்டிக்காட்டி இருந்தார். இந்த இரண்டு அமைச்சர்களும் இதுவரை பிரதமரின் பிரதான ஆதரவாளர்களாக செயற்பட்டவர்கள்.
இந்த இரண்டு அமைச்சர்களும் வரும் காலத்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிட சந்தர்ப்பங்களை கொண்டிருந்தவர்கள்.
இதற்கு சில மணித்தியாலங்கள் முன்னராக பிரதமரின் Deputy Chief Whip பதவி விலகி இருந்தார். இந்த பதவி நியமனம் தொடர்பாகவும் பிரதமர் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இடைநிலை அதிகாரிகள் பலரும் தொடர்ந்தும் பதவி விலகி வருகின்றனர்.