பிரித்தானியா விடுத்த ஈரான் கப்பலை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி

Iran-Nuclear

ஐரோப்பிய ஒன்றியம் சிரியாவுக்கு எதிராக விடுத்த பொருளாதார தடைகளை மீறி, சிரியாவுக்கு ஈரானின் கப்பலான Grace 1 ஈரானின் எண்ணெய்யை எடுத்து சென்றது என்று கூறி பிரித்தானியா அக்கப்பலை கைப்பற்றி இருந்ததது. உடனே ஈரானும் பிரித்தானியாவின் கப்பல்கள் இரண்டை பாரசீக வளைகுடாவில் கைப்பற்றி இருந்தது.
.
நேற்று பிரித்தானியா தான் கைப்பற்றிய ஈரானி கப்பலான Grace 1 ஐ விடுவித்து இருந்தது. ஆனால் அந்த கப்பல் தற்போதும் Gibraltar அருகே நிலைகொண்டுள்ளது.
.
இன்று வெள்ளி அதே Grace 1 என்ற கப்பலை கைப்பற்றுமாறு அமெரிக்கா தனது படைகளுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது. ஆனாலும் அமெரிக்க படைகள் அவ்வாறு Grace 1 கப்பலை கைது செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
.
மேற்படி கப்பலும், அதில் உள்ள எண்ணெய்யும் சுமார் $995,000 பெறுமதியானது என்று கூறப்படுகிறது.

.