பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் Brexit இணக்கம்

UK_EU

பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியா ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முயற்சி தொடர்பாக இணக்கம் ஒன்றை அடைந்துள்ளனர். இந்த செய்தியை இருதரப்பும் இன்று வியாழன் அறிவித்து உள்ளன.
.
ஆனாலும் இந்த இணக்கம் பிரித்தானிய பாராளுமன்றத்தாலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் சட்டப்படி அங்கீகரிக்கப்படல் வேண்டும். அதன் பின்னரே இந்த இணக்கம் நடைமுறை ஆக்கப்படலாம்.
.
பிரித்தானியாவின் எதிர் கட்சி இந்த இணக்கத்தை நிராகரிப்பதாக கூறியுள்ளது. தெரேசா மே வரைந்த இணக்கத்திலும் கீழானது இது என்கிறது எதிர் கட்சி. மேயின் திட்டத்தை பிரித்தானிய பாராளுமன்றம் நிராகரித்து இருந்தது.
.
வட அயர்லாந்தின் முக்கிய கட்சியான Democratic Unionist கட்சியும் (DUP) இந்த இணக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
.
இந்த இணக்கம் நடைமுறைக்கு வந்தால் பிரித்தானியா சுமார் $42 பில்லியனை பிரிவு தொகையாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செலுத்தும். வட அயர்லாந்து சந்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் இருக்கும்.
.