பிரித்தானியாவுக்கு ஆட்சி மாற்றம், றுவண்டாவுக்கு $310 மில்லியன்

பிரித்தானியாவுக்கு ஆட்சி மாற்றம், றுவண்டாவுக்கு $310 மில்லியன்

அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற தேர்தல் Conservative கையில் இருந்த ஆட்சியை பறித்து Labour கட்சியிடம் வழங்கியது. இந்த ஆட்சி மாற்றம் $310 மில்லியன் பணத்தை றுவண்டா (Rwanda) என்ற ஆபிரிக்க நாட்டுக்கு ‘சும்மா இருக்க’ வழங்கியுள்ளது.

முன்னாள் பிரித்தானிய பிரதமர் சுனக் பிரித்தானியா செல்லும் அகதிகளை றுவண்டா அனுப்பி அங்கு வைத்து அகதி விசாரணைகளை செய்ய திட்டம் ஒன்றை வகுத்தது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆங்கில கால்வாய் ஊடு செல்லும் அகதிகளை குறைக்க முனைந்தது Conservative அரசு.

அந்த முயற்சிக்கு றுவண்டாவை பிரித்தானியாவே வலிந்து கேட்டது. றுவண்டாவும் அதற்கு இணங்கியது. ஆனால் இந்த திட்டத்துக்கு எதிராக பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக திட்டம் இழுபட்டது.

தேர்தலின் பின் புதிய பிரித்தானிய பிரதமர் அந்த திட்டம் “dead and buried” என்று கூறி திட்டத்தை நிறுத்திக்கொண்டார்.

ஒப்பந்தத்தை எழுதிய சுனக் அரசு திட்டம் நிறைவேறாத இடத்தில் பணம் திருப்பி செலுத்தப்பட வேண்டும் என்று இணக்கத்தில் எழுதவில்லை. அதனால் தாம் பணத்தை திருப்பி செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்கிறது றுவண்டா அரசு.