பிரான்ஸ் தேர்தலில் வலதுசாரியின் பெரும்பான்மை தடுப்பு

பிரான்ஸ் தேர்தலில் வலதுசாரியின் பெரும்பான்மை தடுப்பு

ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இடம்பெற்ற இறுதி பொது தேர்தலில் Le Pen தலைமயிலான National Rally என்ற வலதுசாரி கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை தடுக்க ஜூன் 10ம் திகதி இணைந்த 5 இடதுசாரி கட்சிகளின் New Popular Front (NPF) என்ற கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆனால் எவரும் பெரும்பான்மை பெறவில்லை.

அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வி அடைந்ததால் விசனம் கொண்ட சனாதிபதி Macron திடீரென உள்நாட்டு தேர்தலை அறிவித்தார்.

உள்நாட்டு தேர்தலில் வலதுசாரி National Rally கட்சி பெரும்பான்மை ஆசனங்களை வெல்வதற்கான சாத்தியம் அதிகரித்ததால் 5 இடதுசாரி கட்சிகள் NPF என்ற கூட்டணியை அமைத்து போட்டியிட்டன.

மொத்தம் 577 ஆசனங்களை கொண்ட சபைக்கு கட்சிகள்/கூட்டணிகள் எதிர்பார்க்கும் ஆசன தொகைகள் வருமாறு:

இடதுசாரி NPF கூட்டணி: 182
இடதுசாரி Macron கூட்டணி: 168
வலதுசாரி NR கூட்டணி: 143

Republicans: 60