பிரான்சில் மிகப்பெரிய டைனோசர் துடை எலும்பு ஒன்று கண்டுபிக்கப்பட்டு உள்ளது. பிரான்சின் தென்மேற்கு பகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட இந்த எலும்பு சுமார் 2 மீட்டர் (6.6 அடி) நீளம் கொண்டது.
.
இந்த எலும்பு Sauropods என்ற தாவரம் உண்ணும் மிருக வகையை சார்ந்தது. விஞ்ஞான அறிவுக்கு எட்டியவரை இந்த மிருகமே பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய மிருகமாகும்.
.
இந்த வகை மிருகம் சுமார் 140 மில்லின் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக விஞ்ஞானம் கூறுகிறது. இவை சுமார் 40 முதல் 50 தொன் எடையை கொண்டிருக்கலாம் நேரும் கூறப்படுகிறது.
.
இப்பகுதியில் சுமார் 40 வகை மிருகங்களில் 7,500 எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு உள்ளன.
.