பிரான்சின் ஜனாதிபதியை இழிவு செய்தார் ரம்ப்

NATO

தற்போது இடம்பெறும் 70 ஆவது நேட்டோ (NATO) அமர்வுக்கு ஐரோப்பா சென்றுள்ள அமெரிக்க சனாதிபதி ரம்ப் பிரான்சின் சனாதிபதி மக்ரானை (Macron) இழிவு செய்துள்ளார். NATO அணி மூளை செய்த நிலையில் (brain dead) உள்ளது என்று அண்மையில் மக்ரான் கூறியதே ரம்பின் விசனத்துக்கு காரணம்.
.
NATO தொடர்பான மக்ரானின் கூற்று “nasty”, “insulting”, “very dangerous” என்றெல்லாம் கூறியுள்ளார் ரம்ப். அத்துடன் அமெரிக்காவுக்கு அல்ல, பிரான்சுக்கே NATO அவசியம் தேவை என்றும் ரம்ப்  கூறியுள்ளார் .
.
அத்துடன் பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் குறைந்து தமது GDP யின் 2% பெறுமதியை பாதுகாப்புக்கு செலவிடவேண்டும் என்றும் ரம்ப் வலியுறுத்தி உள்ளார். பிரான்ஸ் தற்போது 1.84% GDP யை மட்டுமே பாதுகாப்புக்கு செலவிடுகிறது.
.
NATO அணியில் உள்ள துருக்கியும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் முரண்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஆதரவு கொண்ட Kurdish ஆயுத குழுவான YPG யை துருக்கி பயங்கரவாத குழு என்று பட்டியலிட வேண்டும் என்கிறது. துருக்கி YPG மீது போர் தொடுத்துள்ளது.
.
சோவித்த யூனியனுக்கு எதிராக ஆரம்பித்த NATO வுக்கு தற்போது சீனாவும் ஒரு புதிய எதிரியாக உள்ளது. சீனாவிலிருந்து எழக்கூடிய ஆபத்துகளை NATO முதல் முறையாக இந்த அமர்வில் குறிப்பிடவுள்ளது.
.