பிரதமர் டிரஸ் 6 கிழமைகளில் பதவி விலகினார்

பிரதமர் டிரஸ் 6 கிழமைகளில் பதவி விலகினார்

பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் பதவிக்கு வந்து 6 கிழமைகளில் இன்று வியாழன் பதவியை விட்டு விலகியுள்ளார். அதனால் இவரே பிரித்தானியாவில் மிக குறைந்த காலம் பதவியில் இருந்த பிரதமர் ஆகிறார்.

இந்த அறிவிப்பை டிரஸ் பிரதமரின் வதிவிடமான Number 10 Downing Street முன்னே செய்துள்ளார்.

இவர் பதவிக்கு வந்தது பொது தேர்தல் மூலம் அல்ல. பதிலுக்கு உட்கட்சி வாக்கெடுப்பு மூலமே இவர் பதவிக்கு வந்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு உட்கட்சி வாக்கெடுப்பு நிகழலாம். பின் அந்த ஆட்சியும் முறிந்து போகலாம்.

உட்கட்சி வாக்கெடுப்பின் முதல் கட்டத்தில் 357 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் வாக்களிப்பர். அவர்கள் தெரிவு செய்யும் இரண்டு நபர்கள் மட்டும் கட்சி உறுப்பினர் மூலமான வாக்கெடுப்புக்கு விடப்படும்.

ஆனால் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே புதிய பிரதமரை தீர்மானிக்க முனையலாம். அல்லது மேசைக்குக்கு கீழால் பேசி ஒருவரை மட்டும் தனித்து போட்டியிட வைக்கலாம். இச்செயலை எதிர் கட்சியான Labour கட்சி எதிர்க்கலாம்.

டிரஸுக்கு முன் 1827ம் ஆண்டில் பிரதமர் பதவிக்கு வந்த George Canning என்பவர் மொத்தம் 119 தினங்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்தார்.

ஒரு காலத்தில் உலகை ஆண்ட பிரித்தானியா தற்போது தன்னையே ஆழ தெரியாமல் குழம்பி உள்ளது.