பா. ஜ. நாலு மாநிலங்களில் வெற்றி பெறுகிறது

பா. ஜ. நாலு மாநிலங்களில் வெற்றி பெறுகிறது

அண்மையில் இடம்பெற்ற 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணல் தவுகளின்படி மோதி தலைமையிலான இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி 4 மாநிலங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

உத்தர பிரதேசம், உத்ரகாண்ட், புஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் புஞ்சாப்பை தவிர ஏனைய 4 மாநிலங்களிலேயே பா.ஜ. வெல்லும் என்று வாக்கு எண்ணல் கூறுகிறது.

உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பா. ஜ. ஆட்சியில் இருப்பது 2014ம் ஆண்டு இடம்பெறவுள்ள மத்திய அரசுக்கான தேர்தலில் பா. ஜ. வலுப்பட உதவும்.

மொத்தம் 117 ஆசனங்களை கொண்ட புஞ்சாப் மாநிலத்தில் Aam AAdmi Party 92 ஆசனங்களை வென்று அங்கு ஆட்சியை கைப்பற்றுகிறது. புஞ்சாப் விவசாயிகளுக்கும் பா. ஜ. அரசுக்கும் இடையில் புதிய சட்டங்கள் காரணமாக முறுகல் நிலை உருவாகி உள்ளது.

புஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் தனது தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி எல்லா இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது.