பாராளுமன்றம் கலைப்பு, நவம்பர் 14 தேர்தல்

பாராளுமன்றம் கலைப்பு, நவம்பர் 14 தேர்தல்

இலங்கை பாராளுமன்றம் கடந்த இரவு கலைக்கப்பட்டு அடுத்த பொது தேர்தல் நவம்பர் மாதம் 14ம் திகதி இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்றம் நவம்பர் 21ம் திகதி கூடும்.

வரும் பொது தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அக்டோபர் 4 முதல் அக்டோபர் 11ம் திகதி மதியம் 12 மணி வரை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரணில் தான் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியதால் NPP அனுராவும், SJB சஜித்தும் மட்டுமே தற்போது பிரதான தலைவர்களாக உள்ளனர்.

இன்று செப்டம்பர் 25ம் திகதி இரவு 7:30 மணிக்கு அனுர பொதுமக்களுக்கு உரையாற்றுவார்.