இன்று வியாழன் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப். ஜெனரல் H. R. McMaster பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ரம்ப் அரசில் இருந்து நீங்கும் மிக முக்கிய அதிகாரிகளில் இவரும் ஒருவராகிறார்.
.
.
McMaster சுமார் ஒரு வருட காலம் மட்டுமே பாதுகாப்பு ஆலோசகர் பதிவில் இருந்துள்ளார். முன்னர் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த Michael Flynn என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே McMaster பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஏற்று இருந்தார்.
.
.
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக John Bolton ஏப்ரல் 9 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார். புஷ் காலத்தில், 2005 முதல் 2006 வரை, Bolton அமெரிக்காவின் ஐ. நா. வுக்கான தூதுவராக பதவி வகித்தவர். இவர் பேச்சுக்களில் ரம்புக்கு நிகரானவர்.
.
.
2003 ஆம் ஆண்டில் ஈராக்கின் சதாமை விரட்ட இவர் அயராது பாடுபட்டவர்.
.
.
அதேவேளை ரம்ப் பதவிக்கு வந்த பின்னர் இடம்பெற்ற அனைத்து இடைக்கால தேர்தல்களிலும் அவரின் கட்சியான Republican Party தோல்வியையே அடைந்து வந்துள்ளது.
.
.