இந்தியாவின் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று சனிக்கிழமை தனது 92 ஆவது வயதில் மரணமாகி உள்ளார். பல உறுப்புகள் செயல் இழந்தமையாலே அவர் மும்பாயில் உள்ள Breach Candy வைத்தியசாலையில் மரணமானதாக கூறப்படுகிறது.
இவர் சுமார் 30,000 பாடல்களை 16 மொழிகளில் பாடி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்தி பாடல்களே இவரை பிரசித்தம் அடைய செய்தன.
திரை உலகில் தொடர்பு கொண்டிருந்த தந்தையிடம் இசையை கற்ற இவர் முதலில் மராத்தி திரைப்பட பாடலையே பாடினார். 1942ம் ஆண்டு வெளிவந்த Kiti Hasaal என்ற திரைப்படத்திலேயே இவர் முதலில் பாடினார். ஆனாலும் அந்த பாடல் இறுதியில் விலக்கப்பட்டு இருந்தது.
1949ம் ஆண்டு வெளிவந்த Mahal என்ற படத்தில் இவர் பாடிய “Aayega Aanewaala” என்ற பாடலே இவரை மிக பிரபலம் அடைய செய்தது.
1955ம் ஆண்டில் இவர் Seda Sulang என்ற இலங்கை சிங்கள படத்தில் “Sri Lanka, Ma Priyadara Jaya Bhumi” என்ற பாடலை பாடியிருந்தார்.
1956ம் ஆண்டு முதல் இவர் தமிழிலும் பாட ஆரம்பித்தார். இவர் தமிழில் முதல் பாடிய பாடல் “எந்தன் கண்ணாளன் கரை நோக்கி போகிறான்”
லதா மங்கேஷ்கர், ஆஷா பாஸ்லி, பி. சுசீலா ஆகியோருள் யார் அதிகம் பாடல்களை பாடியவர் என்ற கணிப்பு தற்போது அறியப்படாது உள்ளது.