பாகிஸ்தான் விமானம் வீழ்ந்தது, 99 பேர் வரை பலி

PIA_Pakistan

பாகிஸ்தானின் வடகிழக்கு நகரான லாகூரில் (Lahore) இருந்து கராச்சியில் (Karachi) உள்ள Jinnah International Airport சென்ற Pakistan International Airlines (PIA) விமானம் ஒன்று (Flight 8303) மொத்தம் 91 பயணிகளுடனும், 8 பணியாளர்களுடனும் வீழ்ந்து மோதி உள்ளது. அதில் பயணித்த பெரும்பாலானோர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
.
Jinnah விமான நிலையத்தில் இருந்து சுமார் 3.2 km தொலைவில் உள்ள Model Colony என்ற குடியிருப்பு பகுதியிலேயே இந்த விமானம் தரை இறங்கு முன், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை 14:30 மணியளவில், வீழ்ந்து உள்ளது. அங்கு நிலத்தில் இருந்தவர்கள் யாரும் பாதிப்புக்கு உள்ளானர்களா என்பது இதுவரை அறியப்படவில்லை.
.
மேற்படி Airbus A320 வகை விமானத்தின் விமானி விமானம் இயந்திர கோளாறில் உள்ளதாக விபத்துக்கு முன் அறிவித்ததாக PIA அதிகாரி Arshad Malik கூறி உள்ளார்.
.
2016 ஆம் ஆண்டில் PIA விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 47 பேர் பலியாகி இருந்தனர்.
.
2012 ஆம் ஆண்டில் Bhoja Air என்ற பாகிஸ்தான் விமான சேவையின் விமான விபத்துக்கு 127 பேர் பலியாகி இருந்தனர்.
.
2010 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் Airblue விமான சேவையின் விமான விபத்துக்கு 152 பேர் பலியாகி இருந்தனர்.
.