Asim Saleem Bajwa என்பவர் ஒரு முன்னாள் பாகிஸ்தான் இராணுவ ஜெனரல். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றபின் இவர் சீனாவின் Belt and Road திட்டத்துக்கு பாகிஸ்தானின் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர் பிரதமரின் இம்ரான் கானின் ஆலோசகர் பதிவியிலும் உள்ளார்.
இந்த முன்னாள் ஜெனரல் தற்போது ஊழல் குற்றசாட்டில் அகப்பட்டு உள்ளார். இவர் அமெரிக்காவில் உரிமை கொண்டுள்ள பெரும் வர்த்தகம் தொடர்பானது இந்த குற்றச்சாட்டு.
அமெரிக்காவின் பிரபல Papa John’s என்ற pizza நிறுவனத்தின் பல கிளைகளுக்கான உரிமையை (franchise) இந்த முன்னாள் ஜெனரலின் மனைவி கொண்டுள்ளார். ஜெனெரலில் மனைவியே Papa John’s நிறுவனத்தின் மிகப்பெரிய franchise என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இவர் படிப்படியாக ஜெனரல் பதவி வரை வளர, இவரின் அமெரிக்க Papa John’s முதிலீடும் படிப்படியாக வளர்ந்து உள்ளது. தற்போது ஜெனெரலின் அமெரிக்க சொத்து சுமார் $70 மில்லியன் எனப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜெனெரலை Belt and Road/China-Pakistan Economic Corridor பதவிக்கு அமர்த்த முன் இந்த ஜெனரல் தனது அமெரிக்க வர்த்தக உண்மையை மறைத்து உள்ளார்.
உண்மை வெளிவந்தபின், வெள்ளிக்கிழமை ஜெனரல் தனது ஆலோசகர் பதவியில் இருந்து விலக முன்வந்திருந்தாலும், பிரதமர் இம்ரான் கான் விலகலை நிராகரித்து உள்ளார்.
மேற்படி உண்மைகளை FactFocus என்ற இணையம் வெளியிட்டு உள்ளது. இந்த இணையத்தை உருவாக்கியவர்களில் பாகிஸ்தானின் Ahmed Noorani என்ற பத்திரிகையாளரும் ஒருவர். இவருக்கு பல மரண மிரட்டல்கள் விடுக்கப்பட்டு உள்ளன.
இராணுவத்தின் கைக்குள் இருக்கும் பாகிஸ்தான் நீதிமன்றம் முன்னாள் பிரதமர் Nawaz Sharif தனது UAE வருமானத்தை மறைத்துள்ளார் என்று கூறியே அவரை பதவியில் இருந்து விரட்டியது.