சீனா ஐரோப்பிய நாடுகளுடனான தனது இணைய தொடர்பை வலுப்படுத்த புதியதோர் கடலடி fiber optic cable இணைப்பை பதித்து வருகிறது. Peace Cable என்ற பெயர் கொண்ட இந்த இணைப்பு சீனாவில் இருந்து பாகிஸ்தான் ஊடு (CPEC திட்டத்தில்) அரபு கடலை நிலம் வழியே சென்று அடைந்து, பின் அங்கிருந்து பிரான்சின் Marseille துறைமுகத்தை இந்துசமுத்திரம், சுயஸ் கால்வாய் ஊடு நீருக்கு அடியே சென்று அடையும்.
இந்த cable தென்னாபிரிக்கா, கென்யா, Djibouti ஆகிய பல நாடுகளையும் சீனாவுடன் இணைக்கும். சுமார் 15,000 km நீளம் கொண்ட இந்த இணைப்புக்கு $240 மில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது. இது சீனாவின் Belt and Road Initiative (BRI) திட்டத்தில் ஒரு அங்கம்.
இந்த இணைப்பின் bandwidth சுமார் 96 terabits per second ஆக இருக்கும். அது second ஒன்றில் சுமார் 90,000 மணித்தியால வீடியோக்களை செலுத்துவதற்கு நிகரானது.
இந்த இணைப்பு மூலம் பாகிஸ்தானும் பலனை அடையவுள்ளது. தற்போது பாகிஸ்தான் 7 கடலடி இணைய இணைப்புகளை கொண்டுள்ளது. அதில் 4 இந்தியாவில் இருந்தே வருகின்றன. புதிய Peace Cable இணைப்பு பாகிஸ்தானை இந்திய இணைப்பில் இருந்து விடுவிக்கும்.
சீனா கடலடி இணைப்புகளை செய்வதை அமெரிக்கா முடிந்த அளவு தடுத்து வருகிறது. சீனா தனது இணைப்புகள் மூலம் செல்லும் தரவுகளை கைப்பற்றலாம் என்பதே அமெரிக்காவின் கவலை. அத்துடன் சீனாவை இணைப்புகளில் செல்லும் தரவுகள் அமெரிக்காவின் கைகளுக்கு எட்டாது. ஏற்கனவே ஆசியாவில் சீனாவின் இவ்வகை முயற்சிகளை அமெரிக்கா தடுத்து உள்ளது.