பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இஸ்லாமபாத் போலீசார் இம்ரானின் லாகூர் நகரத்துக்கு சென்றுள்ளனர். இம்ரான் பிரதமராக இருந்த காலத்தில் கிடைத்த பரிசுகளை விற்பனை செய்தார் என்பதே இம்ரான் மீதான குற்றச்சாட்டு.
போலீசார் தாம் இம்ரானின் Zaman Park என்ற வீட்டுக்கு ஞாயிறு சென்றபோது அவர் அங்கு இருக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
கடந்த செவ்வாய் இஸ்லாமபாத் நீதிமன்றம் ஒன்று இம்ரானை கைது செய்ய உத்தரவிட்டு இருந்தது. இம்ரான் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து இருந்தார்.
கூட்டணி கட்சி ஒன்று ஆதரவை பின்வாங்க இம்ரான் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது இம்ரான் மீது பயங்கரவாதம் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
கடந்த நவம்பர் மாதம் அரச எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றில் இம்ரான் துப்பாக்கி சூட்டுக்கும் இலக்காக்கினார். குண்டு இம்ரானின் காலில் பாய்ந்தது. ஒரு ஆதரவாளர் சூட்டுக்கு பலியாகி இருந்தார்.
அமெரிக்கா தனக்கு எதிராக இயங்குவதாக இம்ரான் முன்னர் கூறியிருந்தார்.