பாகிஸ்தான் தாம் இன்று வியாழன் 290 km தூரம் சென்று தாக்கக்கூடிய நிலத்தில் இருந்து நிலத்துக்கான (surface-to-surface) ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாக கூறியுள்ளது. இந்த ஏவுகணை பல வகை குண்டுகளை காவி செல்லும் தரம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
.
பாகிஸ்தானின் இந்த பரிசோதனை தொடர்பாக தமக்கு முன்கூட்டியே அறிவிப்பு விடுக்கப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது.
.
Ghaznavi என்ற இந்த ஏவுகணை பரிசோதனை இரவு நேரத்திலேயே செய்யப்பட்டுள்ளது.
.
கடந்த மே மாதம், இந்தியாவில் தேர்தல்கள் இடம்பெற்ற நேரத்தில், பாகிஸ்தான் Shaheen II என்ற ஏவுகணையை பரிசோதனை செய்திருந்தது.
.