பஹாமஸ் சூறாவளிக்கு 2,500 பேர் பலி?

Bahamas

அண்மையில் பஹாமஸ் தீவுகளை (Bahamas) தாக்கிய Dorian என்ற சூறாவளிக்கு இதுவரை 50 பேர் மட்டுமே பலியானதாக பட்டியலிடப்பட்டாலும், தற்போது சுமார் 2,500 பேர் காணப்படாதோர் பட்டியலில் உள்ளனர். சிறிய ஒரு தீவில் இவர்கள் தவறி தற்போது ஒரு கிழமைக்கு மேலாகிறது.
.
செப்டம்பர் 1ஆம்  திகதி Abacos தீவின் கிழக்கே நுழைந்த Dorian செப்டம்பர் 3ஆம் திகதி தீவின் வடக்கே வெளியேறி இருந்தது.
.
இந்த சூறாவளி Abacos தீவை தாக்கியபோது காற்று வீச்சு 295 km/h (185 mph) ஆகவும், மழை வீழ்ச்சி 89 cm (35 inch) ஆகவும் இருந்துள்ளது.
.
இந்த சூறாவளி பின்னர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்கும் என்று எதிர்பார்த்திருந்தாலும், சூறாவளி கடலோரம் வடக்கே திரும்பி சென்று உக்கிரத்தை இழந்தது.
.