ChatGPT என்ற AI (Artificial Intelligence) software அமெரிக்காவின் University of Minnesota சட்ட பிரிவு மற்றும் University of Pennsylvania ஆகிய வர்த்தக பிரிவு சோதனைகளில் சித்தி அடைந்துள்ளது.
மொத்தம் 4 சட்ட பாடங்களின் வழங்கப்பட்ட 95 MCQ (multiple choice questions) கேள்விகளுக்கும், 12 கட்டுரை கேள்விகளுக்கும் பதிலளித்த ChatGPT சராசரியாக C+ அளவிலான புள்ளிகளை (65% – 69%) பெற்று 4 பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளது.
வர்க்க பாடங்களில் ChatGPT 70% முதல் 75% வரையிலான புள்ளிகளை பெற்றுள்ளது.
ChatGPT (Chat Generated Pre-trained Transformer) ஒரு chatbot. Chatbot என்ற software இணையத்தில் மனிதருக்கு பதிலாக வாடிக்கையாளரின் அல்லது பாவனையாளரின் இலகுவான கேள்விகளுக்கு பதில்களை கூறும் வல்லமை கொண்டது.
இது எழுத்து மூலமான (text) அல்லது ஒலி/உரையாடல் மூலமான (audio) கேள்விகளுக்கு பதிலளித்தது. தற்போது அது வளர்ச்சி அடைந்து பல்கலைக்கழக சோதனை வினாக்களுக்கும் பதில் அளிக்கிறது.
Jimmy Wales சீனாவின் Tiananmen சதுக்கத்தில் கொலை செய்யப்பட்டாரா என்ற ஒரு மூடத்தனமான கேள்விக்கு ChatGPT “இல்லை, Jimmy Wales Tiananmen சதுக்கத்தில் கொலை செய்யப்படவில்லை. Jimmy Wales என்ற Wikipedia ஆரம்பிப்பாளர் தற்போது உயிருடன் உள்ளார்” என்று தரமான பதில் கூறியுள்ளது ChatGPT.