இந்தியாவின் Alliance Air மேற்கொள்ளும் பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை பலாலியை நோக்கிய திசையில் குறைந்த கட்டணத்தையும், சென்னையை நோக்கிய திசையில் கூடிய கட்டணத்தையும் அறவிட இலங்கை அரசு நடைமுறை செய்துள்ள $50.00 குடியகல்வு வரியே காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போது சென்னை-பலாலி கட்டணம் 6,702 இந்திய ரூபாய்களாக உள்ளது. ஆனால் பலாலி-சென்னை கட்டணம் 9,200 இந்திய ரூபாய்களாக ஆக உள்ளது.
இலங்கை அறவிடும் குடியகல்வு கட்டணத்தை கைவிடுமாறு Alliance Air சேவையின் CEO Vineet Sood இலங்கை அரசிடம் கேட்டுள்ளதாக கூறியுள்ளார். கட்டுநாயக்கா போன்ற இலங்கையின் ஏனைய விமான நிலையங்களில் இவ்வகை கட்டணம் இல்லை.
தாம் பலாலிக்கான சேவையை கொழும்பு வரை நீடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் Sood கூறியுள்ளார். போதிய பயணிகள் கிடைத்தால் பலாலி-மதுரை, பலாலி-தூத்துக்குடி சேவைகளையும் தாம் ஆரம்பிக்கக்கூடும் என்றும் Alliance கூறியுள்ளது.
தற்போது பலாலி சேவையில் போதிய வருமானம் இன்மையால் Alliance ஏர் இந்திய மத்திய அரசின் உதவியையும் நாடி உள்ளது.