திங்களும், செவ்வாயும் West Bank பகுதியில் உள்ள Jenin என்ற பலஸ்தீனர் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் செய்த பெரும் தாக்குதல்களுக்கு 10 பேர் பலியாகியும், பலர் காயமடைந்து உள்ளனர். பலியானோரில் 3 சிறுவர்களும் அடங்குவர்.
தாக்குதல்கள் இடம்பெறும் இடத்துக்கு பலஸ்தீனர்களின் அம்புலன்ஸ் செல்லாது தடுக்க இஸ்ரேல் இராணுவம் வீதிகளை உடைத்து இருந்தது. இந்த முகாம் பகுதிக்கு மின் இணைப்பு, நீர் இணைப்பு ஆகியவற்றையும் இஸ்ரேல் இராணுவம் தடை செய்திருந்தது.
வழமைபோல் ஐ.நாவின் WHO உட்பட MSF, Red Cross ஆகிய அமைப்புகளும் கவலை தெரிவித்து உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் இதுவே மிக பெரிய இராணுவ நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பலஸ்தீனர் ஒருவர் தனது வாகனத்தை தலைநகர் Tel Aviv இல் மக்களிடையே செலுத்தியதில் 8 காயமடைந்து உள்ளனர். வாகனத்தை செலுத்தியவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 140 பலஸ்தீனர்களும், 26 யூதர்களும் வன்முறைகளுக்கு பலியாகி உள்ளனர்.