பலஸ்தீன் ஐ.நாவில் முழு அங்கத்துவம் கொண்ட நாடாக உரிமை பெறுவதை அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ (veto) வாக்கு மூலம் தடுத்து உள்ளது.
நேற்று வியாழன் 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் (UN Security Council) இடம்பெற்ற வாக்கெடுப்பில் 12 உறுப்பினர் நாடுகள் ஆதரவாக வாக்களிக்க அமெரிக்கா வீட்டோ மூலம் தீர்மானத்தை தடுத்து உள்ளது.
ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, பிரித்தானியாவும், சுவிட்சலாந்தும் வாக்களியாது இருந்துள்ளன.
பலஸ்தீன் தற்போது உறுப்பினர் அல்லாத பார்வையாளர் (non-member observer) உரிமையை மட்டுமே கொண்டுள்ளது.