பலஸ்தீனர் வீடுகளை இஸ்ரேல் அழிப்பு, 73 பேர் வீதியில்

பலஸ்தீனர் வீடுகளை இஸ்ரேல் அழிப்பு, 73 பேர் வீதியில்

Wets Bank பகுதியில் உள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கில் இருந்த பல பலஸ்தீனர் வீடுகளை இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை அழித்து உள்ளது. அதனால் 41 சிறுவர்கள் உட்பட 74 பேர் வீதிக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

ஐ. நா. இது தொடர்பாக கவலையை மட்டும் தெரிவித்து உள்ளது. தம்மை நீதி, நேர்மையானவர்கள் என்று பறைசாற்றும் மேற்கு அரசியல்வாதிகள் எவரும் இது தொடர்பாக கருத்துக்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை.

ஆனால் மனிதநேயம் கொண்ட இஸ்ரேல் அமைப்பான B’Tselem இதை கண்டித்து உள்ளது. இந்த அமைப்பும் வீடுகள் அழிக்கப்பட்டதால் 74 பேர் வீதிக்கு வந்ததை ஏற்றுக்கொண்டு உள்ளது.

Khirbet Humsa ( அரபில் Humsa al-Bqaiaa) என்ற பகுதியில் பல சந்ததிகளாக உள்ள Bedouin குடியிருப்புகளே இவ்வாறு அழிக்கப்பட்டு உள்ளன. இவை சட்டவிரோதமாக நிறுவப்பட்டன என்கிறது அங்கு இராணுவ ஆட்சி செய்யும் ஆக்கிரமித்து உள்ள இஸ்ரேல் படைகள். இப்பகுதிகளை எல்லாம் தமதாக்கும் நோக்கில் உள்ளது இஸ்ரேல்.

வீடுகள், கால்நடை கூடங்கள், மலசல கூடங்கள் ஆகியன உட்பட மொத்தம் 76 கட்டங்கள் அழிக்கப்பட்டு உள்ளன என்கிறது ஐ.நா. அறிக்கை.