இஸ்ரேல் பலஸ்தீனர்களை அடக்கி, ஒடுக்கி அவர்களின் நிலங்களை அபகரித்து வந்தாலும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் தாம் இஸ்ரேல்-பலஸ்தான் என்ற two-state தீர்வில் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறி வந்துள்ளன.
ஆனால் இன்று இஸ்ரேல் பாராளுமன்றம் இஸ்ரேல் மீது two-state தீர்வை திணிப்பதை நிராகரிக்க சட்டம் இயற்றி உள்ளது. மொத்தம் 120 பாராளுமன்ற உறுப்பினர்களில் 99 பேர் நிராகரிப்புக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.
தற்போதைய இஸ்ரேல் அமைச்சர்கள் சிலர் காசா பலஸ்தீனரை எகிப்து உள்ளே தள்ளி காசாவை முற்றாக அபகரிக்க கேட்டுள்ளனர்.