சவுதி அமெரிக்காவுடன் நேட்டோ (NATO) வகையிலான பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை செய்ய விரும்புகிறது. அவ்வகை பாதுகாப்பு உடன்படிக்கை சாத்தியம் இல்லை என்றாலும் அமெரிக்காவுடன் இடைநிலை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்வதாயினும், சவுதி பலஸ்தீனர் விசயத்தை கைவிட்டு இஸ்ரேலுடன் முழு உறவை நிலைநாட்ட சவுதியை அழுத்துகிறது பைடென் அரசு என்று கூறப்படுகிறது.
2022ம் ஆண்டு பைடென் சவுதி சென்ற வேளையில் சவுதி அரசர் சல்மான் பைடெனிடம் NATO வகையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை கேட்டிருந்தார். அதாவது நேட்டோவின் Article 5 இல் உள்ளது போல் சவுதி தாக்கப்படால் அது அமெரிக்கா மீதான தாக்குதல் என்று கருதி அமெரிக்க படைகள் சவுதியின் பாதுகாப்புக்கு விரைத்தல் அவசியம்.
நேட்டோ வகை உடன்படிக்கைக்கு அமெரிக்க காங்கிரசின் அனுமதி அவசியம் என்றும் அதை பைடென் பெறுவது சாத்தியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
பதிலுக்கு பைடென் அமெரிக்கா இஸ்ரேலுடன் கொண்டுள்ளது போன்ற உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்க கூடும் என்றும் ஆனால் அதற்கு சவுதி பலஸ்தீனர் உரிமைகளை கைவிடு இஸ்ரேலுடன் முழுமையான உறவை நிலைநாட்ட வேண்டும் என்று கூறுவதாக அறியப்படுகிறது.
சீனா அண்மையில் சவுதியையும், ஈரானையும் உறவாட வைத்தது அமெரிக்காவுக்கு பாதகமாக அமைந்துள்ளது. சவுதியை மீண்டும் தனது ஆளுமைக்குள் இழுக்க முனைகிறது அமெரிக்கா.
இஸ்ரேலின் பிரதமர் நெட்டன்யாகூ இஸ்ரேல்-சவுதி உறவில் பலஸ்தீனர் veto power கொண்டிருக்க முடியாது என்றுள்ளார்.
பத்திரிகையாளர் Jamal Khashoggi படுகொலை செய்யப்பட்ட பின்னர் கிளர்ந்தெழுந்த பைடென் தற்போது சவுதியை தன் பக்கம் இழுக்கும் நோக்கில் அந்த படுகொலையை மெல்ல மறைத்து வருகிறார்.