பலஸ்தீனரை கேடயமாக பயன்படுத்தும் இஸ்ரேலிய படைகள் 

பலஸ்தீனரை கேடயமாக பயன்படுத்தும் இஸ்ரேலிய படைகள் 

காசாவில் பலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேலிய படைகள் மனித கேடயமாக பயன்படுத்துவதாகவும், பொறிகள் இருக்கும் என்றுகருதப்படும் வீடுகளை, அறைகளை பரிசோதிக்க சிறுவர்கள் உட்பட பொதுமக்களை முதலில் அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு இஸ்ரேலிய படையினன் ஒருவரும், 5 பலஸ்தீனரும் வழங்கிய உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவின் CNN செய்தி நிறுவனம் ஆக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தாம் புக பயப்படும் இடங்களுக்கு பலஸ்தீன பொதுமக்களை அனுப்புவதை இஸ்ரேல் படையினர் “mosquito protocol” என்று அழைப்பதாகவும் மேற்படி படையினன் கூறியுள்ளார். அதற்காக தாம் இரண்டு பலஸ்தீன சிறுவர்களை பிடித்து வைத்திருந்ததாகவும் பின்னர் விடுதலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்,

காசாவில் இஸ்ரேலின் செய்கைகளை விரும்பாத சில இஸ்ரேலிய படையினர் தமது வெறுப்புகளை Breaking the Silence என்ற அமைப்பு மூலம் வெளியிடுகின்றனர்.

அதேவேளை 4 இஸ்ரேல் பிரதமர்களின் கீழ் பணியாற்றிய உயர் அதிகாரியான Eran Etzion என்பவர் படையினர் சட்டவிரோத கட்டளைகளை செய்ய மறுக்கிமாறு கூறியுள்ளார்.