பர்மா எல்லையில் சீன இராணுவம் பயிற்சி

பர்மா எல்லையில் சீன இராணுவம் பயிற்சி

பர்மா (மியன்மார்) எல்லையோரம் சீன இராணுவம் சனிக்கிழமை முதல் இராணுவ பயிற்சிகளை செய்து வருகிறது. வழமையாக பர்மாவின் இராணுவம் சீனாவுடன் நல்ல உறவை பேணினாலும், எல்லை பகுதியில் ஆட்சி செய்யும் warlords மீது தற்போது விசனம் கொண்டுள்ளது சீனா.

வெள்ளிக்கிழமை பொருட்களை ஏற்றி சென்ற சீனாவின் பார வாகனம் ஒன்று Muse என்ற பர்மாவின் வடகிழக்கு நகரில் தீயிடப்பட்டது. சீனா மீது விசனம் கொண்ட warlords இதை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அண்மையில் Muse நகருக்கு அருகில் உள்ள Laukkaing என்ற பர்மா நகரில் இருந்து இயங்கிய 100,000 சீன இணையம் மூலம் ஊழல் செய்யும் நபர்கள் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் மூலம் பர்மாவின் இராணுவ தலைவர்கள் பெரும் செல்வங்களை அடைந்து இருந்தனர். ஆனால் இந்த திருட்டு கூட்டத்தின் பிரதான குறி அப்பாவி சீன மக்களே.

சீனா கொடுத்த அழுத்தத்தாலேயே பர்மாவின் இராணுவ தலைவர்கள் சீன இணைய திருட்டு (cyber crime) குழுக்களை சீனாவிடம் கையளித்தது. சிலரின் கூற்றுப்படி சீன போலீசாரே பர்மாவுள் நுழைந்து கைதுகளை செய்தனர்.

மொத்தம் 4 warlords குழுக்கள் சீன-பர்மா எல்லைகளில் இணையம் மூலமான திருட்டு வேலைகளையும், சூதாட்ட வேலைகளையும் செய்து வந்தனர். இவர்கள் போதை உற்பத்தியையும் செய்கின்றனர்.

இவர்களின் இலாபத்தின் சிறு பங்கு இராணுவ தலைவர்களையும் அடைகின்றன.