பர்மாவின் இராணுவம் தாம் 4 மரண தண்டனை வழங்கப்பட்ட எதிர் கட்சியினரை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளது. இவர்கள் மீது இராணுவம் பயங்கரவாத குற்றங்களை சுமதி இருந்தது. அவர்கள் எவ்வாறு, எப்பொழுது கொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களை இராணுவம் வெளியிடவில்லை.
இந்த 4 பேரும் பர்மாவில் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு மூலம் பதவியை கைக்கொண்ட இராணுவத்துக்கு எதிராக போராடியவர்கள். இவர்களுக்கான மரண தண்டனை தீர்ப்பு கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டு இருந்தன.
இவர்கள் மீதான வழக்கு பொது (civil) நீதிமன்றத்துக்கே உரியது என்றாலும், பார்வையாளர் இன்றி இராணுவ நீதிமன்றத்திலேயே இவர்கள் மீதான வழக்குகள் இடம்பெற்றன.
கொலை செய்யப்பட்டவரில் Kyaw Min Yu என்பவர் ஒரு முன்னணி ஆர்ப்பாட்டகாரர். Phyo Zayar என்பவர் National League கட்சி உறுப்பினர். கூடவே Hla Myo Aung, Aung Thura Zaw ஆகியோரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
மொத்தம் 114 பேருக்கு பர்மாவின் இராணுவம் மரண தண்டனை தீர்ப்பு வழங்கி உள்ளதாக Human Rights Watch கூறுகிறது.