பர்மாவை தாக்கிய 7.7 அளவிலான நிலநடுக்கம் 

பர்மாவை தாக்கிய 7.7 அளவிலான நிலநடுக்கம் 

பர்மாவை 7.7 அளவிலான நிலநடுக்கம் இன்று வெள்ளி மதியம் அளவில் தாக்கியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் பர்மாவின் மத்திய Mandalay பகுதியில் நிலைகொண்டாலும் தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெருமளவு கட்டிடங்கள் உடைந்து விழுந்தாலும் இதுவரை உயிர் பலி விபரங்கள் அறியப்படவில்லை.

2021ம் ஆண்டு பர்மாவின் இராணுவம் சதிமூலம் ஆட்சியை கைப்பற்றிய பின் அங்கிருந்து உண்மையான தகவல்கள் வெளிவருவது கடினமாக உள்ளது.

தாய்லாந்தில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி ஒன்று உடைந்து விழுந்துள்ளது. கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த பலர் இடிபாடுகளில் அகப்பட்டு உள்ளனர். அரசு குறைந்தது 81 பேர் இடமறியாது உள்ளனர் என்று கூறுகிறது.

தாய்லாந்தில் உள்ள இன்னோர் உயர் மாடியின் உச்சியில் உள்ள நீர் தடாகத்தின் நீர் நடுக்கத்தின்போது தளம்பி வழிந்துள்ளது.