பர்மாவில் பெப்ரவரி 1ம் திகதி இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்திருந்த இராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெறும் ஆர்பாட்டங்களுக்கு இன்று புதன்கிழமை 38 பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. அத்துடன் மேலும் பலர் காயப்பட்டும் உள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் 18 ஆர்பாட்டக்காரர் படைகளால் கொலை செய்யப்பட்டு இருந்தனர். பெப்ருவரி 1ம் திகதி ஆட்சி கவிழ்ப்பு முதல் இதுவரை குறைந்தது 59 ஆர்பாட்டகாரர் படைகளால் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
பெப்ருவரி 1ம் திகதி சனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியின் தலைவி Aung San Suu Kyi இராணுவத்தால் கைது செய்யப்பட்டு இதுவரை தடுப்பில் உள்ளார். அவருடன் மேலும் சுமார் 1,000 Aung San Suu Kyi கட்சியின் உறுப்பினர்களும்,
ஆதரவாளர்களும் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஐ. நாவுக்கான பர்மாவின் தூதுவர் Kyaw Moe இராணுவ ஆட்சியை கண்டித்த பின், அவரை இராணுவம் தூதுவர் பதவியில் இருந்து நீக்கி உள்ளது. Kyaw Moe பர்மாவில் இராணுவ ஆட்சியை நிறுத்த உதவி செய்யும்படி ஐ.நாவை கேட்டுள்ளார். பிரித்தானியாவின் அழைப்பின் காரணமாக ஐ. நா. நாளை வெள்ளிக்கிழமை பர்மா தொடர்பாக உரையாட உள்ளது. ஆனால் அது ஆக்கபூர்வமாக எதையும் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக அரிது.