பர்மாவில் மிகப்பெரிய போதை கைப்பற்றல்

Burma

பர்மாவின் வடகிழக்கே இயங்கிவந்த போதை தயாரிப்பு நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட அந்நாட்டு போலீசார் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான போதையை கைப்பற்றி உள்ளனர்.  இந்த செய்தியை திங்கள் வெளியிட்ட United Nations Office on Drugs and Crime (UNODC) அமைப்பு மேற்படி போதை தயாரிப்புக்கு உலக அளவிலான சமூகவிரோத கும்பல்களின் ஆதரவு இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளது.
.
இந்த முற்றுகையில் 3,748 லீட்டர் methyl fentanyl, 193 மில்லியன் methamphetamine குளிசைகள், 500 kg crystal methamphetamine, 292 kg heroin, opium, morphine ஆகியன கைப்பற்றப்பட்டு உள்ளன. போதைகளை தயாரிக்கும் இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
.
அத்துடன் பர்மா மற்றும் வெளிநாட்டவர் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
.
மேற்படி மூலப்பொருட்கள் ஆய்வுகூட (synthetic) போதைகளை தயாரிக்க பயன்படுவன. ஆய்வுகூட போதையை தயாரிப்பது இலக்கு, மலிவு. ஆனால் இயற்கையான போதைகளுடன் ஒப்பிடுகையில், ஆய்வுகூட போதைகள் மனிதரை மேலும் வன்மையாக பாதிக்கும்.
.
Fentanyl உடலுக்கு மிகவும் ஆபத்தானது. அது heroin உடன் ஒப்பிடுகையில் 50 மடங்கு ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
.
மேற்படி முற்றுகை இடம்பெற்ற மக்கள் குறைந்த, காட்டுப்பகுதியான இடம் தாய்லாந்து, பர்மா, லாஒஸ் (Laos) ஆகிய நாடுகள் சந்திக்கும் பகுதியோர Shan மாநிலத்தில் உள்ளது.
.
போதை தயாரிப்பு வேலைகள் பர்மாவில் இடம்பெற்றாலும், இங்கு பயன்படுத்தப்படும் இரசயாணங்கள் சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
.