பர்மாவில் அங் சன் சு கி தலைமையில் புதிய ஆட்சி

Burma
சுமார் 50 வருட இராணுவ ஆட்சிக்கு பின் அங் சன் சு கி தலைமையில் புதியதோர் ஜனநாயக ஆட்சி பர்மாவில் அமைகிறது. இன்று திங்கள் வெளிவர தொடங்கிய தேர்தல் முடிவுகளின்படி அங் சன் சு கி தலைமையிலான National League for Democracy (NLFD) 70% வாக்குக்களை பெற்றுள்ளது. இராணுவ ஆதரவுடன் போட்டியிட்ட Union Solidarity and Development Party (USDP) தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொண்டுள்ளது.
.
1990 ஆம் ஆண்டிலும் இவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்று இருந்தது. அப்போது படுதோல்வி அடைந்த இராணுவம் தேர்தல் முடிவுகளை இரத்து செய்துவிட்டு இராணுவ ஆட்சியை அமைத்திருந்தது. அத்துடன் 15 வருடங்களுக்கு மேலாக அங் சன் சு கியை வீட்டு காவலில் வைத்தது. அனால் இம்முறையும் இராணுவம் அவ்வாறு செய்யும் என்று எவரும் கருதவில்லை.
.
பதிலாக 25% ஆசனங்களை இராணுவம் தேர்தலுக்கு அப்பால் தம்வசம் கொண்டுள்ளது. அத்துடன் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவற்றையும் இராணுவம் தன்னகத்தே கொண்டுள்ளது.
.
அத்துடன் அந்நாடு சட்டப்படி அங் சன் சு கி எந்தவொரு உயர்மட்ட அரசியல் பதவிகளையும் கொண்டிருக்க முடியாது. அவரின் மகன்கள் இங்கிலாந்து பிரசைகள் என்றபடியால் இந்த தடை உள்ளது.
.

பர்மாவின் சனத்தொகை சுமார் 52 மில்லியன் ஆகும்.
.