கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சீனாவின் சொங்சிங் (ChongQing) நகரில், Yangtze ஆற்றுக்கு மேலாக செல்லும் பாலம் சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்று கீழே உள்ள ஆற்றுள் வீந்திருந்தது. பயணி பெண் ஒருவர் சாரதியை தாக்கிய போது, சாரதி கட்டுப்பாட்டை இழக்க, பஸ் 50 மீட்டர் கீழே உள்ள ஆற்றுள் வீழ்ந்துள்ளது. பஸ்சில் இருந்த 15 பெரும் பலியாகி உள்ளனர்.
.
விபத்து இடம்பெற்ற நாட்களில் அதிகாரிகளுக்கு விபத்துக்கான காரணம் என்னவென்று தெரிந்திருக்கவில்லை. காரணம் அறியாத அதிகாரிகள் 70 மீட்டர் ஆழத்தில் இருந்த அந்த பஸ்சையம், மரணித்த பயணிகளையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட அந்த பஸ்சில் இருந்த CCTV கருவி எடுத்த வீடியோ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகளுக்கு காட்டியுள்ளது.
.
தனது இறக்குமிடத்தை தவறவிட்ட 48 வயதுடைய பெண் பயணி ஒருவர் தன்னை நடு பாலத்தில் இறக்கி விடும்படி வாதாடி உள்ளார். சாரதி மறுத்து, அடுத்த நிறுத்தத்தில் இறங்குமாறு கூற, சாரதியை பலமுறை தாக்கி உள்ளார் அந்த பயணி. இறுதி தாக்குதலின்போது சாரதி கடுப்பாடை இழக்க, பஸ் எதிரே வந்த இன்னோர் காரை மோதி பின் ஆற்றுள் வீந்துள்ளது.
.
.