பப்புவா நியூ கினி மண்சரிவில் அகப்பட்டோர் தொகை 2,000

பப்புவா நியூ கினி மண்சரிவில் அகப்பட்டோர் தொகை 2,000

மூன்று தினங்களுக்கு முன் பப்புவா நியூ கினியில் இடம்பெற்ற மண்சரிவுகளுள் அகப்பட்டவர் தொகை 2,000 ஆக அதிகரித்து உள்ளது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதுவரை சுமார் 670 பேர் பலியாகி உள்ளதாக ஐ. நா.அடையாளம் கண்டுள்ளது.

 மண்சரிவுகளும் முறிந்த மரங்களும் வீதிகளை தடைப்படுத்தி உள்ளதால் உதவிகள் தற்போது விமானங்கள் மூலமே செய்யப்படுகின்றன.

உள்ளூர் நேரப்படி வெள்ளி அதிகாலை 3:00 மணியளவில் Kaokalam என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த சரிவில் சுமார் 1,100 வீடுகள் அகப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சில பலியான உடல்கள் மீட்கப்பட்டாலும், சரிவில் மரணித்தோர் தொகை வெகுவாக அதிகரிக்கும் என்று அரசு கூறியுள்ளது.

2000ம் ஆண்டுக்கு பின் இங்கு சனத்தொகை கணக்கெடுப்பு செய்யப்படவில்லை என்பதால் மரணித்தோர் தொகையை கணக்கிடுவது இலகுவாக இருக்காது. 

இந்த மண்சரிவுக்கு பெரிய மரங்களும் கவிழ்ந்ததாலும் மக்கள் பலியாகியும், காயமுற்றும் உள்ளனர்.