இந்தியா தனது நாட்டவரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கு பத்தாயிரம் கோடி இந்திய ரூபாய்களை ($1.43 பில்லியன்) ஒதுக்கி உள்ளது. 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதமளவில் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை இந்திய அமைச்சரவை இந்த நிதியை ஒதுக்கி உள்ளது.
.
Gaganyaan என்ற இந்த திட்டப்படி 3 இந்திய விண்வெளி வீரர்கள் குறைந்தது 7 நாட்களுக்கு விண்ணில் தங்குவர்.
.
மேற்படி முயற்சிக்கு முன்னோடியாக இந்திய முதலில் இரண்டு மனிதர் அற்ற கலங்களை விண்ணுக்கு அனுப்பும். அவை 2020 ஆம் ஆண்டிலும், 2021 ஆம் ஆண்டிலும் இடம்பெறும். இந்த முயற்சிக்கு ரஷ்யாவின் Roscosmos ஆய்வு கூடமும், பிரான்சின் CNES ஆய்வு கூடமும் ஒத்துழைப்பு வழங்கும்.
.
இந்த முயற்சி தொடர்பான செய்தியை பிரதமர் மோதி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டு இருந்தாலும், தற்போதே அதற்கு தேவையான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ISRO (Indian Space Research Organization) இந்த முயற்சியை முன் நின்று செய்யும்.
.
2022 ஆம் ஆண்டில் இந்தியா மனிதரை விண்ணுக்கு அனுப்பினால், அவ்வாறு செய்யும் நாலாவது நாடக இந்தியா அமையும். ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஏற்கனவே தமது வீரரையும், மற்றைய நாட்டு வீரரையும் விண்ணுக்கு அனுப்பி உள்ளன.
.